சென்னை:அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பொது தேர்வுக்கான கட்டணங்களை, பிப்., 4க்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர் விபரங்களை, அரசு தேர்வுத் துறை ஏற்கனவே சேகரித்துள்ளது. தமிழ் வழி மாணவர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு, தேர்வு கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாணவர்களிடம் தேர்வு கட்டணம் பெற்று, பிப்., 4ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம், பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.