பொது வெளியில் ரகசிய ஆவணம் :மத்திய அமைச்சர் அதிருப்தி

Updated : ஜன 24, 2023 | Added : ஜன 24, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி :''நீதிபதிகள் நியமனம் தொடர்பான புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையை, உச்ச நீதிமன்றம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது மிகத் தீவிரமான பிரச்னை,'' என, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே கருத்து மோதல் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், சில மூத்த வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற
பொது வெளி , ரகசிய ஆவணம்,மத்திய அமைச்சர்  ,அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :''நீதிபதிகள் நியமனம் தொடர்பான புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையை, உச்ச நீதிமன்றம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது மிகத் தீவிரமான பிரச்னை,'' என, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே கருத்து மோதல் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், சில மூத்த வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் 'கொலீஜியம்' கடந்தாண்டு பரிந்துரை செய்திருந்தது.


latest tamil news


இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்தது.வழக்கமாக இந்த நடைமுறைகள் ரகசியமாக வைக்கப்படும். ஆனால், இந்த விவகாரம் தொடர்பான தகவல் பரிமாற்றங்களை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டது.


இது குறித்து பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளதாவது:இந்த விவகாரம் தொடர்பாக தனியாக விளக்கம் அளிக்கப்படும். இருப்பினும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான ஆவணங்களை பொது வெளியில் வெளியிட்டது மிகத் தீவிரமான பிரச்னையாகும்.


குறிப்பாக, ரா மற்றும் ஐ.பி., எனப்படும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.இந்த அமைப்புகளின் அதிகாரிகள் தங்களுக்கு பிரச்னை ஏற்படுமோ என அஞ்சுகின்றனர். இந்த அதிகாரிகள் எப்படி சுதந்திரமாக, ரகசியமாக செயல்பட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (11)

GMM - KA,இந்தியா
25-ஜன-202309:10:27 IST Report Abuse
GMM மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட ரகசியம் காக்க வேண்டும் என்பர்.? ரகசிய உளவு பிரிவு அறிக்கை பொது வெளியில் வெளியிடுவது கூடாது.தேர்வு லிஸ்டில் உள்ள வக்கீல் குறை பற்றி, அரசின் குறிப்பு பொதுவெளியில் தெரிந்தால்
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
25-ஜன-202308:37:58 IST Report Abuse
Dharmavaan கொலீஜியும் முறை நீக்கப்பட்டால் மட்டுமே இது சரியாகும்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஜன-202307:38:51 IST Report Abuse
Lion Drsekar இன்று எல்லாமே வெட்ட வெளிச்சத்துக்கு ஏதாவது ஒரு நிலையில் வெளி வருகிறது, ஒருவர் தனி மனிதனாகவோ அல்லது அவர் சார்ந்த சமுகம் அல்லது கட்சியின் பிரநிதியாக மக்கள் மத்தியில் பிரபலனால் அடுத்த நொடியில் அவரது குடும்ப, பின்னணி, மற்றும் அவர் சார்ந்த அனைத்தையும் அந்த அந்த திரையின் வாயிலாகக் கண்டு செயல்படுவது ஒரு புறம் இருந்தாலும் அந்த அந்த எதிர்ப்பு இயக்கங்கள் எங்கெல்லாம் அவர்களுக்கு அவதூறு பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கோறதோ அதை வைத்துக்கொண்டு முழுநேர தொழிலாக நடத்த்திவரும் இந்த காலகட்டத்தில் எங்குமே எதையுமே மறைக்க முடியாது, மேலும் நியமித்தல் என்பது வேலை வாய்ப்பு கொடுப்பது , அதற்க்கு இரகசியம் எதுவுமே தேவை இல்லை, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X