காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் வளாகத்தில் சார்பு பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இதன் அருகில் நிழலுக்காக மரக்கன்றுகள் நடப்பட்டன.
பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை அந்த மரத்தின் நிழலில் நிறுத்தி வைக்க வசதியாக இருந்தது.
அந்த மரங்கள் உயரமாக வளர்ந்து காணப்பட்டது. அதன் மேல்பகுதியில் மின் ஒயர் செல்வதால் பாதுகாப்பு கருதி வரிசையாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டன.
வெட்டிய மரக்கிளைகள் காய்ந்து அப்படியே கிடக்கின்றது. வெட்டிய பின் காய்ந்து கிடக்கும் மரங்கிளைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் இவ்விடத்தில் வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை உள்ளது.