சஹரன்பூர்:உத்தர பிரதேசத்தில் ஒருவர் 'என்கவுன்டரில்' கொல்லப்பட்ட விவகாரத்தில், 12 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள தித்கி கிராமத்தில், 2021 செப்டம்பரில், பசு கடத்தல்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது நடந்த என்கவுன்டரில், ஜீஷன் ஹைதர் என்பவர் கொல்லப்பட்டார். இது குறித்து தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டிடம் மனு அளித்த ஹைதரின் மனைவி, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தன் கணவர் போலீசாரால் கொல்லப்பட்டதாக புகார் தெரிவித்தார்.
இது குறித்து முதல்வர் பிரிவுக்கு புகார் அனுப்பிய இவர், என்கவுன்டர் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அனில் குமார், என்கவுன்டரில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, மூன்று சப் - இன்ஸ்பெக்டர்கள் உட்பட 12 போலீசார் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.