குவஹாத்தி:அசாமில், ௧௪ வயதுக்கு கீழுள்ள சிறுமியை திருமணம் செய்பவர்கள் மீது, 'போக்சோ' சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
குழந்தை திருமணம் காரணமாக, மாநிலத்தில் பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. அசாமில் ௩௧ சதவீத திருமணங்கள், அரசால் தடைசெய்யப்பட்ட வயதில் தான் நடக்கின்றன.
இதைத் தடுக்க, ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தை பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்படுவார்.
கிராமத்தில் நடைபெறும் குழந்தை திருமணத்துக்கு எதிராக அளிக்கப்படும் புகார்களை பதிவது, அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவரின் கடமையாகும். ௧௪ - ௧௮ வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.