புதுடில்லி:ரொட்டி நிறுவன விற்பனை அதிகாரியை கடத்த முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்
வடக்கு டில்லி வஜிராபாத் பகுதியில் உள்ள ரொட்டி தயாரிப்பு நிறுவன விற்பனை அதிகாரி பங்கஜ் சவுஹான், 26. சமீபத்தில், மதியம் 2:30 மணிக்கு சங்கம் விஹாரி உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பலாஸ்வா பகுதியைச் சேர்ந்த அலோக்,22, அவரது சகோதரர் யோகேந்திரன்,25, முகுந்த்பூரைச் சேர்ந்த கரண்,21, சீலு,23 ஆகியோர் சவுஹானுடன் வாக்குவாதம் செய்தனர். திடீரென இரும்புக் கம்பியால் சவுஹானை தாக்கி, காரில் வலுக்கட்டாயமாக ஏற்றினர்.
கார் நகருக்குள் சென்று கொண்டிருந்த போது, உதவி கேட்டு சவுஹான் அலறினார். சாலையில் சென்று கொண்டிருந்த சிலர், அந்தக் காரை மறித்து, சவுஹானை காப்பாற்றினர். நான்கு பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சவுஹான் பணிபுரியும் ரொட்டி நிறுவனத்தில்அலோக் மற்றும் நீலு ஆகிய இருவரும் பணிபுரிந்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.