சண்டிகர்:பஞ்சாப் அரசு வெளியி உட்பட்டுள்ள அறிக்கை:
மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான கூடுதல் டி.ஜி.பி.,க்கள் குருபிரீத் கவுர் தியோ, சாஷி பிரபா துவிவேதி ஆகியோர் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அதேபோல், வரீந்தர்குமார், ஈஸ்வர் சிங், ஜிதேந்திர குமார் ஜெயின், எஸ்.கே.அஸ்தானா மற்றும் ஆர்.என்.தோக் ஆகியோரும் டி.ஜி.பி.,க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ஏழு கூடுதல் டி.ஜி.பி.,க்கள் பதவி உயர்வு பெற்றதால், பஞ்சாப் மாநிலத்தில் தற்போது டி.ஜி.பி.,க்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.