கும்மிடிப்பூண்டி:கோவையில் இம்மாதம், 22ம் தேதி, தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன. அதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த, 750 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
வயது வாரியாக, ஆறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதியில், ஆண்கள், பெண்கள் என, இரு பிரிவுகளாக சாம்பியன் பட்டத்திற்கான போட்டிகள் நடந்தன.
கும்மிடிப்பூண்டி கைரளி யோகா வித்யா பீடத்தில் பயிற்சி பெறும் தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர் ஹேமந்த்குமார், 19, ஆண்கள் பிரிவிலும், ஆறாம் வகுப்பு மாணவி லத்திகாஸ்ரீ, 11, பெண்கள் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
சாம்பியன் பட்டம் வென்ற இருவரையும், அவர்களுக்கு யோகா பயிற்சி அளித்த ராதாகிருஷ்ணன் ஆகியோரை கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.