ஊத்துக்கோட்டை:மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை மற்றும் வேல்ஸ் மருத்துவ கல்லுாரி இணைந்து ஊத்துக்கோட்டையில்,நேற்று இலவச மருத்துவ முகாம் நடத்தியது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வார்டு கவுன்சிலர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் வசந்த்குமார், நரேஷ் ஆகியோர் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு இலவச மருத்துவம் பார்த்தனர்.
இதில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பொது மருத்துவம் பார்க்கப்பட்டது. இதில் அவர்களுக்கு இலவச மருந்துகள் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டன.