சென்னை, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, 'இண்டிகோ' விமானம் நேற்று முன்தினம் சென்னை வந்தது. இதில், வரும் பெண் பயணி ஒருவர், தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற, இலங்கை பெண் பயணியை, சுங்க அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.
அப்போது, டேப் சுற்றப்பட்ட நான்கு பொட்டலங்கள், உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை ஆய்வு செய்ததில், 25.73 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 516 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. தங்கத்தை பறிமுதல் செய்து சுங்க அதிகாரிகள் அவரிடம் விசாரிக்கின்றனர்.