ஜே.என்.யு. பல்கலை.யில் மின்சாரம் துண்டிப்பு: மாணவர்கள் மீது கல்வீச்சு ?: பரபரப்பு

Updated : ஜன 24, 2023 | Added : ஜன 24, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடியை விமர்சிக்கும் பி.பி.சி., ஆவணப்படத்தை டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட திட்டமிட்டுள்ள நிலையில், பல்கலை. முழுவதும் மின்சாரம், இணைய தளம் துண்டிக்கப்பட்டது. மாணவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறதுபிரிட்டனை சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம் 'இந்தியா மோடிக்கான கேள்விகள்' என்ற தலைப்பில்,
 ஆவணப்படம்  ஜே என்.யு   மின்சாரம் துண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பிரதமர் மோடியை விமர்சிக்கும் பி.பி.சி., ஆவணப்படத்தை டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட திட்டமிட்டுள்ள நிலையில், பல்கலை. முழுவதும் மின்சாரம், இணைய தளம் துண்டிக்கப்பட்டது. மாணவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது

பிரிட்டனை சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம் 'இந்தியா மோடிக்கான கேள்விகள்' என்ற தலைப்பில், இரண்டு பாகங்களாக ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், 2002ல் குஜராத்தில் உள்ளதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.


latest tamil news


இன்று (ஜன.24) டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) மாணவர்கள் அமைப்பு, பிபிசி ஆவணப்படத்தை இரவு 9 மணிக்கு திரையிட போவதாக அறிவித்தது. இதற்கு பல்கலை. நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் பல்கலை. வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பல்கலை. நிர்வாகம் , மின் விநியோகத்தையும், இணையதளத்தையும் துண்டித்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பல்கலை. வளாகம் முழுவதும் இருளில் மூழ்கின.எனினும் ஆவணப்படம் குறித்த க்யூஆர் கோடு மூலம் படத்தை மாணவர்கள் சிலர் மொபைலில் டவுன்லோடு செய்து பார்த்தனர். இதன் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மொபைலில் படம் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது மர்ம கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கல்வீச்சு சம்பவம் நடக்கவில்லை என கூறினர். இதையடுத்து பல்கலை. இழுத்து மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (15)

Nellai tamilan - Tirunelveli,இந்தியா
25-ஜன-202311:22:11 IST Report Abuse
Nellai tamilan அந்த பல்கலைக்கழகம் தேசவிரோதிகளின் கூடாரம். மொத்தமாக இழுத்து மூட வேண்டிய ஒன்று.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
25-ஜன-202310:23:19 IST Report Abuse
தமிழ்வேள் ஜெ என் யு என்பது பல்கலை கழகம் அல்ல ...பிரிவினைவாதிகள் ,ஆபிரகாமிய பயங்கரவாதிகள் , தேசத்துரோகிகள் மட்டுமே உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யுனிஸ்டுகளால் வளர்க்கப்படும் ஒரு தேசவிரோத அமைப்பு சீனா தியானன்மென் சதுக்கத்தில் நடத்தியது போன்ற ஒரு போராட்டத்துக்கு எதிரான அடக்குமுறையை ஜெ என் யு வில் அரசு நடத்தவேண்டும் ...இல்லையேல் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் , பிரிவினைவாத திருட்டு திராவிடர்கள் அடங்கமாட்டார்கள் ...இந்த கும்பலுக்கு மனித உரிமை என்பது தேவையே இல்லாத ஒன்று .......மிருகத்தனமாக ஒடுக்கப்படவேண்டிய கூட்டம்
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
25-ஜன-202309:32:04 IST Report Abuse
MARUTHU PANDIAR காசு கொடுத்து இயக்குவது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X