சென்னை, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், பஞ்சாப் -- சிந்து வங்கியின் நிகர லாபம், 23.92 சதவீதம் உயர்ந்து, 373 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டில், 301 கோடி ரூபாயாக இருந்தது.
இது குறித்து, பஞ்சாப் -- சிந்து வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நடப்பு, 2022 - 23ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், வங்கியின் மொத்த வணிகம், 12.08 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து, 87 ஆயிரத்து, 242 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த வைப்பு தொகை, 9.11 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து, 9,497 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வங்கி வழங்கிய மொத்த கடன் அளவு, 16.54 சதவீதம் உயர்ந்து, 77 ஆயிரத்து, 745 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு இதே காலாண்டில், 66 ஆயிரத்து, 710 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் நிகர லாபம், 373 கோடி ரூபாய் அதிகரித்து, 24 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டில், 301 கோடி ரூபாயாக இருந்தது. நிகர வட்டி வருவாய், 6.20 சதவீதம் உயர்ந்துள்ளது.
வங்கியின் மொத்த வாராக் கடன் அளவு, 8.3 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் அளவு, 2.02 சதவீதமாகவும் குறைந்துள்ளது. வங்கியின் செயல்பாட்டு லாபம். 3.61 சதவீதம் உயர்ந்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.