அம்பத்துார், கனரக வாகனத்தில் சிக்கி பலியான, வடமாநில தொழிலாளியின் உடல், சில அடி துாரம் இழுத்து செல்லப்பட்டு சிதைந்தது.
அம்பத்துார் தொழிற்பேட்டை, அத்திப்பட்டு அருகே, நேற்று முன் தினம் இரவு, வடமாநில தொழிலாளி ஒருவர் நடந்து சென்றார். அப்போது, அதிவேகமாக சென்ற கனரக வாகனம், அவர் மீது மோதியதில் கீழே விழுந்து, அந்த வாகனத்தில் சிக்கினார்.
இதையடுத்து, 200 அடி துாரம் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். அவரது உடல் சிதைந்தது. அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டது. அவருக்கு, 30 வயதிருக்கும் என்று கூறப்படுகிறது.
அவர் குறித்தும் கனரக வாகனம் குறித்தும், செங்குன்றம் போக்குவரத்து குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.