விழுப்புரம் : புதுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாலை நேரத்தில் பஸ் வசதி ஏற்படுத்திக்கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
வானுார் அடுத்த புதுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் கொடுத்துள்ள மனு:
புதுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைகாணிகுப்பம், தேவனந்தல், வங்காரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். மாலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு மாலை 5:30 மணிக்கு விடப்படுகிறது.
அந்த நேரத்தில் பஸ் வசதியில்லாததால் 10 கி.மீ., துாரம் மாணவர்கள் நடந்தே வீட்டிற்கு செல்கின்றனர். இதனால் மாணவ, மாணவியர்கள்பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
மாணவர்களின் நலன் கருதி மாலையில் திண்டிவனம் - உப்புவேலுார் வழித்தடம் எண்.7 பஸ்சை மாலை 5:25 மணிக்கு வரும் நேரத்தினை 5:50 மணியாக மாற்றம் செய்யவும், உப்புவேலுார் வரை செல்லும் பஸ்சை தலைகாணிகுப்பம் வரை நீட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.