விழுப்புரம் : குடியரசு தினத்தையொட்டி, விழுப்புரம் ரயில் நிலையத்தில், போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
இந்திய குடியரசு தின விழா நாளை 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக, விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மோப்ப நாய் டான் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ரயில் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.