மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஜன 24, 2023 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம் வட்டம் பக்கம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ.,செல்வபெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், இயல்,

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம் வட்டம் பக்கம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார்.

ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ.,செல்வபெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், இயல், இசை, நாகட மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெற்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழில் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை சார்பில் 305 பயனாளிகளுக்கு 4.39 கோடி ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X