கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நெல்லிக்குப்பம் சாலையில், கால்நடை மருத்துவமனைக்கு சொந்தமாக ஐந்து ஏக்கருக்கு மேல் இடம் உள்ளது.
இந்த இடத்தில், நீண்ட வருடங்களாக, குப்பை தேங்கியும் சாலையோரம் மண் குவியல் இருந்தது. தற்போது, அந்த இடத்தில், அறிவு சார் பூங்கா கட்டடம் கட்ட, இன்று பூமி பூஜை நடைபெற இருக்கிறது.
அதனால், நேற்று காலை முதல் மாலை வரை, நகராட்சி துாய்மை பணியாளர்கள், சுமார் 60க்கும் மேற்பட்டோர் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு குப்பை மற்றும் சாலையோரமாக தேங்கிய மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டன.