செஞ்சி: உமையாள்புரம் அரசு தொடக்கப் பள்ளியில் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் உமையாள்புரம் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் லோகாம்பாள் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
ஆசிரியர் லட்சுமண விநாயகமூர்த்தி மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.