செஞ்சி : செஞ்சி காவல் நிலையத்தில் எஸ்.பி., ஸ்ரீநாதா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, நிலுவையில் உள்ள வழக்கு விபரங்கள், குற்ற வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார். வழக்குகளை துரிதமாக முடிக்கவும், வழக்குகள் மீது உடனடியாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
பொதுமக்களின் புகார்களை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இன்ஸ்பெக்டர் தங்கம், சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர சுப்ரமணியன், தீபன் ராஜ், தனிப்பிரிவு அக்தர் பாஷா, முனுசாமி உடனிருந்தனர்.