விழுப்புரம் : விழுப்புரம், திண்டிவனத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஏ.ஐ.டி.யூ.சி.,யைச் சேர்ந்த 57 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் இந்தியன் வங்கி எதிரில், ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சங்கையா கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில், மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளையும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
பின், சாலை மறியலில் ஈடுபட முயன்ற சவுரிராஜன் உட்பட 38 பேரை விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்
திண்டிவனம் தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் இன்பஒளி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்டவர்கள் திடீரென, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடன் போலீசார், இன்பஒளி உட்பட 19 பேரை கைது செய்தனர்.