கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
சின்னசேலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் பி.டி.ஓ., அலுவலக இடத்தில் 10 வணிக கடை கள் கட்டப்பட்டன.
சேலம் மெயின்ரோட்டில் உள்ள இக்கடைகளை ஏலம் விடாததால் பூட்டிக்கிடந்தன.
இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு, விருப்பமுள்ளவர்களிடம் இருந்து ஒப்பந்த புள்ளிகள் பெறப்படுவதாகவும், நேற்றுபொது ஏலம் நடக்கும் என அறிவிக்கப் பட்டது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களால் வணிக கடைகளுக்கான ஏலம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பி.டி.ஓ., இந்திராணி தெரிவித்துள்ளார்.