திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில் ஒலக்கூர் கிராமத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு திண்டிவனம் டி.எஸ்.பி., (பொறுப்பு) உமாசங்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் இளஞ்செழியன் அறிமுக உரையாற்றினார். ஊர்வலத்தின்போது, போதை ஒழிப்பின் அவசியம் மற்றும் விளைவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் பேராசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
துணை முதல்வர் பரமகுரு நன்றி கூறினார்.