திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க., சார் பில், எம்.ஜி.ஆர்., 106வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது.
திருக்கோவிலுார், ஐந்து முனை சந்திப்பில், நடந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பு தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ் வரவேற்றனர்.
ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, இளங்கோவன், தனபால்ராஜ், ராமலிங்கம், ஏகாம்பரம், நகர செயலாளர்கள் ராஜ்குமார், பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் சண்முகம், மாவட்டச் செயலாளர் குமரகுரு சிறப்புரையாற்றினர்.
முன்னாள் ஒன்றிய செய லாளர் விநாயகமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் இளவரசன், ஜெ., பேரவை இணை செயலாளர் அசோகன், மண்டல இணை செயலாளர் உமாசங்கர், ஆதன் ரவி, ஜெ., பேரவை துணைச் செயலாளர் சுபாஷ், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் பாலாஜி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பூபேஷ், நகர அவை தலைவர் ஜெயபாலன், பொருளாளர் ஆதம்ஷபி, கவுன்சிலர்கள் முகேஷ், பஷிராஷபி, வினோத் பாபு, பிறைமதி உட்பட பலர் பங்கேற்றனர்.