கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் மோசடி செய்த கிளை மேலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கே.கே நகரை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் வெங்கடேஷ். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி மகேந்திரா ரூரல் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணிபுரிந்தார். அப்போது, 21 வாடிக்கையாளர்களிடம் வசூலித்த தவணை தொகை 2 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை நிறுவனத்தில் கட்டாமல் கையாடல் செய்துள்ளார்.
இது குறித்து அந்நிறுவன கிளை மேலாளர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், வெங்கடேஷ் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.