அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் சாலை விரிவாக்கப் பணியை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.
அவலுார்பேட்டையில் சாணிப்பூண்டி - சேத்பட் செல்லும் வழியில் நெடுஞ்சாலை துறை சார்பில் 6.50 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான பூமி பூஜை விழா நடந்தது.
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான், அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.
ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின்அர்ஷத், கலா நாராயணமூர்த்தி, கணபதி ஊராட்சி தலைவர் செல்வம், துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.