மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அஞ்சூரம்மன் கோவில் குளம் அமைந்துள்ளது.
இந்த குளம் முழுதும், தாமரை மற்றும் புற்கள் வளர்ந்தும், பாசி படர்ந்தும் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள இக்குளக்கரை, வெளியூரில் இருந்து வரும் போக்கு வரத்துப் பயணியர், ஓய்வெடுக்கும் பகுதியாக உள்ளது.
எனவே, குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, கழிவுகளை அகற்ற, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.