ஊட்டி:ஊட்டி அருகே, 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, இரு வட மாநில தொழிலாளர்கள் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி அருகே தனியார் எஸ்டேட்டில் வட மாநில தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் பணிபுரிந்து வருகிறார். இவரது, 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம், வட மாநில தொழிலாளர்கள் இருவர் சிறுமியை துாக்கி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். சிறுமி சப்தம் போட்டதால் பொதுமக்கள் திரண்டு வந்தனர். வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
சிறுமியின் பெற்றோர், ஊட்டி ஊரக மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் கண்மணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராணா ஓரான், 30, பாபுலால் ஓரான்,30, ஆகியோர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.