ஊட்டி:நாட்டின், 75-வது சுதந்திர கொண்டாட்டத்தை தொடர்ந்து, ஊட்டி அருகே குருகுலம் பள்ளியில், ஆக., மாதம் முதல் மாணவர்களிடம் நாட்டுப்பற்று, வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பள்ளி வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, வீரமிக்க இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் 'சிலம்பம்' பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. சிலம்ப சங்கத்தின் தொழில் நுட்ப இயக்குனர் துரைசாமி சித்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இப்பயிற்சியில், 4ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 60 மாணவர்கள் சிலம்ப பயிற்சியை மேற்கொண்டனர். பள்ளி தாளாளர் அர்ஜூணன், முதல்வர் நதியா, உட்பட ஆசிரியைகள் பங்கேற்றனர்.