திருப்பூர்;திருப்பூரில், கஞ்சா விற்ற, இருவரை போலீசார் கைது செய்து, 2.5 கிலோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊத்துக்குளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, முதலிபாளையத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, சிலரைபிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், வீரபாண்டியை சேர்ந்த ரஞ்சித், 24, திருப்பூரை சேர்ந்த விக்னேஷ்குமார், 27 என, இருவரை போலீசார் கைது செய்து, விற்பனைக்கு காரில் கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது தெரிந்தது. 2.5 கிலோ கஞ்சா பொட்டலம் மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.