சென்னை:புள்ளியியல் உதவி ஆய்வாளர் பணிக்கான போட்டி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக, ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில், புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில், 211; கணக்காளர், 5; புள்ளியியல் கோர்ப்பாளர் ஒருவர் என, மொத்தம், 217 காலியிடங்களுக்கு, வரும், 29ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரர்கள், தங்களின் ஒரு முறை பதிவேற்றம் வழியே, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.