சென்னை:''இனி தேர்தலில், 99.99 சதவீதம் நிற்க மாட்டேன்,'' என, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
, அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம், 'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துகிறோம்; ஆதரவு தாருங்கள்' எனக் கேட்டார்.
'அ.தி.மு.க.,வில் பலமுறை இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதை விட, கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். தொண்டர்களும் அதையே விரும்புகின்றனர்.
'எனவே, இணைப்பதற்கான வழி இருந்தால் கூறுங்கள்; பாலமாக செயல்படுகிறேன். வேட்பு மனுவை தவிர்க்க வேண்டும்' என, தெரிவித்தேன்.
எனக்கு பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் வேண்டியவர்கள். வாய்ப்பு கிடைத்தால், பழனிசாமியிடம் சென்று பேசுவேன்.
புதிய நீதிக்கட்சியை பொறுத்தவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்.
பா.ஜ., தலைமையில் புதிய நீதிக்கட்சி செயல்படும். 'வேட்பு மனு தாக்கலுக்கான, ஏ, பி பாரம் கொண்டு வந்தால் கையெழுத்திட தயார்' என, பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் தான், கட்சி பலமாக இருக்கும். எப்படியாவது ஒன்றிணைக்க வேண்டும் என்றுதான், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நினைக்கிறார்.
தனித்தனியாக போக வேண்டும் என்ற எண்ணம், பா.ஜ.,வுக்கு இல்லை. இனி, 99.99 சதவீதம் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
இவ்வாறு, ஏ.சி.சண்முகம் கூறினார்.