தஞ்சாவூர்:தஞ்சாவூரில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், 9 லட்சம் ரூபாய் திருடிய தற்காலிக ஊழியரை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில், பூதலுாரைச் சேர்ந்த முருகானந்தம், 31, தற்காலிக ஊழியராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம், பணியாளர் ஒருவர் எண்ணி வைத்திருந்த, 9 லட்சம் ரூபாயை, முருகானந்தம் திருடியுள்ளார்.
தொடர்ந்து, பணம் எண்ணும் பணி முடிந்த பின், 9 லட்சம் ரூபாய் கணக்கில் குறைந்துள்ளது. வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், முருகானந்தம் பணத்தை திருடியது தெரிய வந்தது.
வங்கி மேனேஜர் அஜய்குமார், தஞ்சாவூர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகானந்தத்தை கைது செய்தனர்.