உடுமலை;உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவில், பாதயாத்திரை குழுவின், 31ம் ஆண்டு பாதயாத்திரை வரும், 28 ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 10:00 மணிக்கு, சோமவாரப்பட்டியில் இருந்து, பாதயாத்திரை காவடி புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், பக்தர்களுக்காக பாதயாத்திரை செல்லும் வழியில், அன்னதானம் வழங்கப்படுகிறது.
பின்னர், வரும் 30ம் தேதி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில், அபிேஷக மற்றும் ஆண்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, பழநி பாதயாத்திரை அன்னதான குழு கமிட்டி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.