வால்பாறை:வால்பாறையில் நேற்று பெய்த கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் பருவமழை நிறைவு பெற்ற நிலையில், கடந்த சில நாட்களாக காலை, மாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் வெயிலும் நிலவியது.
இந்நிலையில், வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதியில் நேற்று காலை, 11:30 மணி 1:30 மணி வரை இடைவிடாமல் பெய்த கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. எஸ்டேட் பகுதியில் பெய்த மழையால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமலும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமலும் தவித்தனர்.