கடன் தொல்லை: தம்பதி தற்கொலை வீட்டை கேட்டு மிரட்டிய இருவர் கைது

Added : ஜன 25, 2023 | |
Advertisement
சேலம்:சேலத்தில், கடன் தொல்லையால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கில், கொடுத்த கடனுக்கு வீட்டை எழுதி தரும்படி கேட்டு மிரட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், அழகாபுரம், பெரியபுதுார் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 66; இவரது மனைவி சாந்தி, 55; இவர்களுக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இவர், 2012ல் இந்தியன் வங்கியில் கடன் பெற்று
 கடன் தொல்லை: தம்பதி தற்கொலை  வீட்டை கேட்டு மிரட்டிய இருவர் கைது

சேலம்:சேலத்தில், கடன் தொல்லையால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கில், கொடுத்த கடனுக்கு வீட்டை எழுதி தரும்படி கேட்டு மிரட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், அழகாபுரம், பெரியபுதுார் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 66; இவரது மனைவி சாந்தி, 55; இவர்களுக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இவர், 2012ல் இந்தியன் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டியுள்ளார். அதற்கான தவணை தொகையை முறையாக செலுத்தாததால், 2018ல் வீட்டை ஏலம் விட உள்ளதாக வங்கி நிர்வாகம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

வீட்டை மீட்பதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த மம்மு நடேசன், 75, உதவியால், உலகநாதன், 45, என்பவரிடம், 18 லட்சம் ரூபாயை ராஜேந்திரன் கடன் பெற்றுள்ளார்.

அந்த தொகையை வங்கியில் செலுத்தி, வீட்டின் மூலப்பத்திரத்தை மீட்டு, உலகநாதனிடம் கொடுத்துள்ளார்.

சில மாதங்கள் கழித்து, உலகநாதன் தான் வழங்கிய கடனுக்கு, 'வட்டியுடன் சேர்த்து, 40 லட்சம் ரூபாய் தர வேண்டும் அல்லது வீட்டை எழுதி கொடுக்க வேண்டும்' என, ராஜேந்திரன், அவரது மனைவி சாந்தி ஆகியோரை மிரட்டியுள்ளார்.

ஆனால், அவர்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில், பெற்ற மகன்களும், மகளும் உதவ முன் வரவில்லை. அதேநேரம், வீட்டை விற்க மனம் இல்லாததால், நேற்று முன்தினம் இரவு, தம்பதியர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தகவலறிந்த அழகாபுரம் போலீசார், தம்பதி உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், தம்பதியரிடம் கந்து வட்டி கேட்டும், வீட்டை எழுதி தரும்படியும் மிரட்டிய உலகநாதன், மம்மு நடராஜன் ஆகியோரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X