திருச்சி:திருச்சியில், ரெடிமேட் ஆடைகள் கண்காட்சி மற்றும் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமாயின.
திருச்சி, தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில், தனியார் ரெடிமேட் ஆடைகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, ஆடைகள் வைத்திருந்த இடத்தில், மின்கசிவால் தீப்பிடித்தது.
திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசுயா தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மூன்று வண்டிகளில் வந்து, இரண்டு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
திருச்சி மாநகரின் பிரதான பகுதியான தில்லை நகரில், இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீ விபத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமானதாக தெரிவிக்கப்பட்டது. தில்லைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement