புதுடில்லி: ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவிடம் புனித போர்வை (சதார்) பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
அஜ்மீர் தர்கா என்பது சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் (மக்பரா)ஆகும். இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இங்கு வருடந்தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா , கரீப் நவாஸ் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்தாண்டு நடைபெற விருப்பதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று புனித போர்வையை வழங்கினார். இந்நிகழ்வின் போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடன் இருந்தார்.