14.6 லட்சம் நிறுவனங்களை காப்பாற்றிய அரசின் திட்டம்

Updated : ஜன 25, 2023 | Added : ஜன 25, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை:மத்திய அரசின் இ.சி.எல்.ஜி.எஸ்., எனும், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் வாயிலாக, கிட்டத்தட்ட 14.6 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக, எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கொரோனா தொற்று நோய் பரவல் காலத்தில், தடை உத்தரவுகளால், வணிகங்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்காக, மத்திய அரசு, பிணை எதுவும் தேவைப்படாத
 14.6 லட்சம் நிறுவனங்கள், அரசின் திட்டம்


மும்பை:மத்திய அரசின் இ.சி.எல்.ஜி.எஸ்., எனும், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் வாயிலாக, கிட்டத்தட்ட 14.6 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக, எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று நோய் பரவல் காலத்தில், தடை உத்தரவுகளால், வணிகங்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்காக, மத்திய அரசு, பிணை எதுவும் தேவைப்படாத இ.சி.எல்.ஜி.எஸ்., கடன் திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 2.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் கடனால், கிட்டத்தட்ட 14.8 லட்சம் வணிகங்கள் காப்பாற்றப்பட்டதாக, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.


latest tamil news


அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தினால், கிட்டத்தட்ட 6.6 கோடி மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்காமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், வங்கிகளின் வாயிலாக 2.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிலுவைக் கடனில், 12 சதவீதம் அளவுக்கு, வாராக் கடனாக மாறாமல் தடுக்கப்பட்டு உள்ளது.இதன் காரணமாக, 6.6 கோடி பேர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

25-ஜன-202306:54:20 IST Report Abuse
அப்புசாமி அப்புடியே கொரோனா காலத்திலும் வளர்ச்சி வளர்ச்சின்னு சொல்லிக்கிட்டிருந்தாங்களே... இப்பத்தான் பூனைக்குட்டி மெதுவா வெளில வருது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202304:34:35 IST Report Abuse
Kasimani Baskaran அருமை. இதுவே திராவிட மாடலாக இருந்தால் கமிசன், கலக்சன், கரப்சன் மூலம் இழுத்து மூட முயற்சி செய்திருப்பார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X