திருப்பரங்குன்றம் : மதுரையில் பிளஸ் 1 மாணவியிடம் ஜாலியாக அலைபேசியில் பேசிய இருவர் மற்றும் திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்ததாக ஒருவர் என மூவர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மாணவிக்கு வீட்டருகே வசிக்கும் பாட்டி ஒருவரின் வீட்டிற்கு வந்த பிளஸ் 2 மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. சில நாட்கள் கழித்து நண்பரான ஆதித்யா 18, அலைபேசியில் இருந்து மாணவியிடம் பிளஸ் 2 மாணவர் பேசினார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆதியும் அலைபேசியில் ஜாலியாக பேச 'நட்பு' தொடர்ந்தது.
ஆதித்யாவின் நண்பர் டூவீலர் மெக்கானிக் கார்த்திக்கும் 21, ஜாலியாக பேசினார்.
சமீபத்தில் மாணவியை வெளியே அழைத்துச்சென்று கார்த்திக் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தார். இதை அறிந்த அவரது மனைவி, மாணவி வீட்டிற்கு சென்று கண்டித்தார்.
இதைபொருட்படுத்தாத கார்த்திக், மாணவியை வெளியே அழைத்துச்செல்ல முயன்றார். போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
அலைபேசியில் பேசியதற்காக மாணவர், ஆதித்யா மீதும், பலாத்காரம் செய்ததற்காக கார்த்திக் மீதும் திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் மூவரையும் கைது செய்தனர்.