ஐதராபாத்: பிரபல தெலுங்கு இளம் நடிகர் சுதீர் வர்மா,33 விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 2016ம் ஆண்டு வெளியான ''குண்டனப்பு பொம்மா '', ''செகண்ட் ஹேண்ட்'' உள்ளிட்ட படங்களில் நடித்தார். மன அழுத்தம் ஏற்பட்டதால், கடந்த 18ம் தேதி விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement