விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை ஈடுபடுத்த வழக்கு

Added : ஜன 25, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
மதுரை : மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் தமிழ் அறிந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது. தீரன் திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.,) பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை ஈடுபடுத்த வழக்கு



மதுரை : மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் தமிழ் அறிந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

தீரன் திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.,) பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் இடத்தில் பயணிகளிடம் சோதனையிடும்போது ஹிந்தியில் பேசுகின்றனர். இது பயணிகளுக்கு புரிவதில்லை.

மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் பயணிகள் எளிதில் புரிந்து கொள்ள அறிவிப்பு பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். தமிழ் அறிந்த பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மத்திய உள்துறை செயலர், சிவில் விமான போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தீரன் திருமுருகன் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: பாதிக்கப்பட்டவர்கள்தான் இதுபோன்ற பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியும். மனுதாரர் தாக்கல் செய்ய முகாந்திரம் உள்ளதா, இம்மனு நிலைக்கத்தக்கதா என கேள்வி எழுகிறது.

மனுதாரர் தரப்பு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் 2 வாரம் ஒத்திவைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (7)

Nellai tamilan - Tirunelveli,இந்தியா
25-ஜன-202311:55:37 IST Report Abuse
Nellai tamilan பாதுகாப்பு வீரர்கள் குழுவில் ஒருவராவது நிசசயம் தமிழும் தெரிந்தவராக இருப்பதில் எந்த தவறும் இல்லை. நியாயமான கோரிக்கை
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
25-ஜன-202310:09:09 IST Report Abuse
N. Srinivasan விமானம் மூலமாக பயணம் செய்யும் போது மக்கள் தமிழ்நாட்டில் மட்டும் பயணம் செய்ய மாட்டார்கள். ஏறுவது வேண்டுமானால் தமிழ்நாடு என இருக்கலாம், இறங்குவது வேறு மாநிலம் அல்ல நாடாக கூட இருக்கலாம் அந்த நிலையில் மக்கள் பல மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் மக்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
rama adhavan - chennai,இந்தியா
25-ஜன-202308:29:17 IST Report Abuse
rama adhavan பிரிவினை வாதத்தின் அடிப்படை இது போன்ற மனுக்கள். அபராதம் செலவு முதலியவற்றுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X