வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,விற்கு மக்கள் பாடம் புகட்டுவர்

Updated : ஜன 25, 2023 | Added : ஜன 25, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா: தி.மு.க., ஆட்சி அனைத்து துறைகளிலும் தோற்று போன ஆட்சி. மகளிருக்கு உரிமை தொகையாக மாதம், 1,000 ரூபாய் கொடுப்பதாக கூறினர்; இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்று கூறினர்; மின் கட்டணத்தை உயர்த்தினர். சொத்து வரியையும் அதிகரித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,விற்கு மக்கள்
BJP, H.Raja, DMK, Election Promise, Election, Erode,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா: தி.மு.க., ஆட்சி அனைத்து துறைகளிலும் தோற்று போன ஆட்சி. மகளிருக்கு உரிமை தொகையாக மாதம், 1,000 ரூபாய் கொடுப்பதாக கூறினர்; இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்று கூறினர்; மின் கட்டணத்தை உயர்த்தினர். சொத்து வரியையும் அதிகரித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,விற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.

டவுட் தனபாலு: மகளிருக்கு, 1,000 ரூபாய், மின் கட்டண உயர்வு எல்லாத்தையும் ஈடு செய்ற மாதிரி, தொகுதியில ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணமழையை கொட்டி, ஆளுங்கட்சியினர் வெற்றியை, 'வாங்கிடுவாங்க' என்பதில், 'டவுட்'டே இல்லை!


latest tamil news


அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி: ஏழைகள் இல்லாத தமிழகத்தை, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஒருங்கிணைந்து உருவாக்குவோம். நம் தலைவர்களின் கனவை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற வேண்டும்.

டவுட் தனபாலு: உங்க தலைவர்களும், நீங்களும் முதல்வர்களா இருந்து, தமிழகத்தை, 33 வருஷம் ஆட்சி செஞ்சிருக்கீங்க... அப்ப எல்லாம் உருவாக்க முடியாத ஏழைகள் இல்லாத தமிழகத்தை, எதிர்க்கட்சியா, அதுவும் நாலஞ்சு அணியா இருந்துட்டு எப்படி உருவாக்குவீங்க என்ற, 'டவுட்' எழுதே!

பத்திரிகை செய்தி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள, தே.மு.தி.க., தலைமை, அக்கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலர் ஆனந்த் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

டவுட் தனபாலு: சுவத்துல போய் முட்டிக்கிட்டா மண்டை உடையும்னு தெரிஞ்சும், வம்படியா போய் முட்டுறதுக்கும் ஒரு முரட்டு துணிச்சல் வேணும்... அது, தே.மு.தி.க., தலைமைக்கு நிறையவே இருக்குது... அதை விட அதிக தைரியம், வேட்பாளர் ஆனந்துக்கு இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (8)

25-ஜன-202311:07:09 IST Report Abuse
அப்புசாமி நாம குடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாம 9 வருஷமா மத்திய அரசு இருக்கிறது
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
25-ஜன-202310:56:55 IST Report Abuse
S.Ganesan . திமுகவினர் அவர்களை முன்னேறாமல் பார்த்துக்கொள்வார்கள்
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜன-202309:53:20 IST Report Abuse
venugopal s முதலில் பாஜகவுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டி விட்டு பிறகு திமுகவுக்கு பாடம் புகட்டுவோம்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X