வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''அ.தி.மு.க. ஒன்றுபட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்றுதான் பிரதமர் விரும்புகிறார்'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று பன்னீர்செல்வம் தன் ஆதரவு நிர்வாகிகளுடன் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்து பேசினார்.
பின் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும். பா.ஜ. போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும். அதே நிலைப்பாட்டுடன் புதிய நீதிக் கட்சி தலைவரை சந்தித்தோம். அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். வேட்பு மனு தாக்கல் 31ல் தான் துவங்குகிறது. வேட்புமனு முடிவதற்கு முன்பு பல்வேறு கட்சிகள் நிலைப்பாடு மாறும்.
![]()
|
யார் மறுக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எங்களை சந்திக்கும் போதெல்லாம் பிரதமர் தன் விருப்பத்தை கூறுகிறார். ஏற்கனவே பழனிசாமியின் நிலைப்பாட்டை 'உலக மகா அரசியல் வித்தகர்' ஜெயகுமார் சொல்லியபடியே இருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். பழனிசாமி தன் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். மறுபடி அவர் அப்பதவியை கோர முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.