காட்டிக் கொடுத்தது தேசிய கீதம்: வங்கதேச வாலிபர் கோவையில் கைது

Updated : ஜன 25, 2023 | Added : ஜன 25, 2023 | கருத்துகள் (27) | |
Advertisement
கோவை: போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று ஷார்ஜா சென்று கோவை வந்த வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 'ஏர் அரேபியா' விமானம் வந்தது. விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில் விமானத்தில் வந்த

கோவை: போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று ஷார்ஜா சென்று கோவை வந்த வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 'ஏர் அரேபியா' விமானம் வந்தது. விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் விமானத்தில் வந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அதில் அவர் மேற்குவங்கம், கோல்கட்டாவை சேர்ந்தவர் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.latest tamil newsஇதையடுத்து, அவரிடம் ஷார்ஜாவிலிருந்து கோல்கட்டா செல்லாமல் கோவை வந்ததற்கான காரணம் குறித்து கேட்டனர். தொடர்ந்து குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த நபரை தேசிய கீதம் பாடும்படி கூறினர். ஆனால், அவரால் தேசிய கீதத்தை முழுமையாக பாட முடியவில்லை. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்த அன்வர் உசேன், 28 எனத் தெரிந்தது. மேலும், போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்ததும் தெரிந்தது.

அன்வர் உசேன், 2018-ம் ஆண்டு திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் டெய்லராக பணிபுரிந்து உள்ளார். அங்கிருந்து பெங்களூரு சென்ற அவர், போலியான பிறப்பு சான்றிதழ் தயார் செய்து, மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா முகவரியில் ஆதார் எண் பெற்றார். இந்த ஆவணங்கள் வாயிலாக, 2020ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் பெற்றார்.

அந்த பாஸ்போர்ட் பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைத்தது. இதையடுத்து அவர் மீண்டும் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.

இதற்காகவே அவர் ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தது தெரிந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், அன்வர் உசேனை கோவை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (27)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
28-ஜன-202317:42:28 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy அனைவருக்கும் ஜெயிலில் சோறு போடா அரசுக்கு பணம் உள்ளதா ?
Rate this:
நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா
29-ஜன-202303:06:46 IST Report Abuse
நரேந்திர பாரதி தினம் 200 ரூபாய் எல்லாம் சுடலை விடியா அரசுக்கு ஒரு மேட்டரா?...
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
28-ஜன-202301:02:53 IST Report Abuse
Murthy பங்காளதேஷ்க்காரன்....எல்லோரும் ஒரே மாதிரிதான் இருப்பானுக.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
27-ஜன-202312:26:13 IST Report Abuse
Rasheel மிக பெரிய தேச பாதுகாப்பு ஆபத்து. எவனும் வரலாம் இங்கே வேலை வாய்ப்பை பிடுங்கலாம் என்றால் தமிழ்நாட்டு காரனுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும். குண்டு வைத்து விட்டு பங்களாதேஷ் போனால் கண்டுபிடிக்கவே முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X