கடலுார் : கடலுாரில், கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் சார் நிலை அலுவலர்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி நடந்தது.
பயிற்சியை, மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார் துவக்கி வைத்தார். துணைப் பதிவாளர் அன்பரசு வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் திலீப்குமார் வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், சரக துணைப் பதிவாளர்கள் கடலுார் துரைசாமி, விருத்தாசலம் ஜீவாநந்தம், சிதம்பரம் சண்முகம், விருத்தாசலம் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குனர் சீனிவாசன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் ராஜேந்திரன்,
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் எழில்பாரதி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் துணைப் பதிவாளர் வைரமணி, இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் ராஜன், சக்திவேல் பங்கேற்றனர்.
பொது விநியோகத் திட்டம், நிதி மற்றும் வங்கியியல், அரசின் சிறப்பு திட்டங்கள், சட்டப்பூர்வ பணிகள், தகவல் அறியும் உரிமை சட்டம், யோகா உட்பட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டுறவு, வீட்டு வசதி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால் வளம் உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.