விருத்தாசலம் : கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய தேர்த் திருவிழாவில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேர்த் திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, 15ம் தேதிமுதல், 22ம் தேதி வரை, தினசரி சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தது.
நேற்று முன்தினம் (23ம் தேதி) முக்கிய நிகழ்வானதேர்த் திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு. பாதிரியார் தேவ சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி, இரவு 8:00 மணிக்கு திருப்பலி நடந்தது.
பின், இரவு 9:00 மணியளவில், பாளையக்காரர் பொன் வீரசேகர கச்சிராயர், புதுவை - கடலுார் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட்ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
விழாவில், மும்பை, பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். நேற்று மாலை 6:00 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது.