சென்னை: இந்திமொழிக்கு எதிரான போராட்டம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
![]()
|
திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் அவர் கூறியதாவது: தமிழுக்காக உயிர்நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள். ஆண்டு தோறும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக கொண்டாப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள் படங்களாக இருந்து வழி நடத்துகிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரே மொழி என்பதை வைத்துக்கொண்டுபிற மொழிகளை பா.ஜ., அரசு. அழிக்க பார்க்கிறது.
![]()
|
இந்திமொழியை திணிப்பதை தனது வழக்கமாக கொண்டுள்ளது. இந்திமொழிக்கு எதிரான போராட்டம் தொடரும். உலகம் முழுவதும் தமிழ் இளைஞர்கள் வலம் வர இரு மொழி கொள்கையே காரணம். திமுக தோன்றியது முதலே மொழி காப்பு இயக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.