ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, காட்டரம்பாக்கம் பகுதியில், வாகன 'சைலன்ஸர்'களுக்கு ரசாயன கலவை பூசும், 'ஆர்பிட் கோடிங்' என்ற பெயரில், தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு, கடந்த 20ம் தேதி, இரவு அதிக அழுத்தம் காரணமாக, ரசாயன கலவையை பீய்ச்சி அடிக்கும் 'பாய்லர்' இயந்திரம், பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி தீ பற்றியது.
இதில், காட்டரம்பாக்கத்தை சேர்ந்த மதன்குமார், 26, திருவள்ளூரை சேர்ந்த சேனாதிபதி, 36, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபாஷ், 19, முத்துராஜ், 26, ரஞ்ஜித். 26, ஆகிய ஐந்து ஊழியர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
இவர்கள் ஐந்து பேரும் மீட்கப்பட்டு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று, சேனாதிபதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மற்ற நான்கு பேரும், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.