சென்னை:சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, மார்க்கெட் பாரம் 6வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி விற்பதாக புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அங்குள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்த கோபாலகிருஷ்ணன், 48, என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 20 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.