சென்னை திருவிழாக்கள் இல்லாத நாளில், சுவாமி ஆற்றங்கரையில் ஓய்வு எடுத்து திரும்பும் நிகழ்வு திருவூறல் உற்சவம் எனப்படுகிறது.
அந்த வகையில், சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உற்சவர் திருவூறல் உற்சவத்தின்போது, திருவல்லிக்கேணியில் இருந்து ஈக்காட்டுத்தாங்கலில், அடையாறு ஆற்றங்கரை வரை சென்று திரும்புவார்.
இந்தாண்டிற்கான திருவூறல் உற்சவத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை புறப்பட்டு மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை வழியாக காலை 11:30 மணிக்கு ஈக்காட்டுதாங்கல் ஆற்றங்கரையை அடைகிறார்.
மதியம் அங்கு, அவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. அங்கிருந்து மாலை புறப்பட்டு இரவு கோவிலை வந்தடைகிறார்.
வீதி உலாவின்போது, வயதானவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு பெருமாள் தரிசனம் தரும் வகையில் மண்டகப்படி எனும் நடைமுறையும் உள்ளது.